2016 டெல்லி வாகன கண்காட்சி: பீட் ஆக்டிவ் கிராஸ் ஓவர் மாடலை வெளிப்படுத்தியது செவ்ரொலெட்

செவ்ரொலெட் நிறுவனம் பீட் ஆக்டிவ் கிராஸ் ஓவர் மாடலை டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இது பீட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல். 

ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் மற்றும் பின்புறத்தில் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிராஸ் ஓவர் மாடல் என்பதால் பிளாஸ்டிக் கிலாடிங்குகள், வீல் ஆர்ச் மற்றும் அலாய் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின் மற்றும் மற்ற பிற அம்சங்கள் அனைத்தும் அப்படியே பீட் மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் வெளியிடப்பட்டால் டொயோடா  எடியாஸ் கிராஸ் , போலோ கிராஸ் மற்றும் பியட் அவென்சுரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.