2016 டெல்லி வாகன கண்காட்சி: எஸன்டியா எனும் காம்பேக்ட் செடான் மாடலை வெளிப்படுத்தியது செவ்ரொலெட்

செவ்ரொலெட் நிறுவனம் எஸன்டியா  எனும் புத்தம் புதிய காம்பேக்ட் செடான் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் பீட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். இத்துடன் பீட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பீட் ஆக்டிவ் எனும்  கிராஸ் ஓவர் மாடலையும் செவ்ரொலெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

உட்புறம் அப்படியே பீட் மாடல் போலவே உள்ளது. இந்த மாடல் பீட் மாடல் போலவே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜினிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மக்கள் மத்தியில் காம்பேக்ட் செடான் அதிக வரவேற்ப்பு இருப்பதால் அனைத்து நிறுவனங்களும் இந்த செக்மெண்டில் ஒரு மாடலை கொண்டுள்ளது. அந்த வகையில் செவ்ரொலெட் நிறுவனமும் தற்போது ஒரு மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும். மேலும் இது செஸ்ட், ஆஸ்பயர், டிசைர் போன்ற காம்பேக்ட் செடான் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.