2016 டெல்லி வாகன கண்காட்சி: வ்ரேங்க்ளர் மற்றும் க்ராண்ட் செரோக்கி மாடல்களை அறிமுகப்படுத்தியது ஜீப்

பியட் நிறுவனம் ஜீப் வ்ரேங்க்ளர் மற்றும் க்ராண்ட்  செரோக்கி மாடல்களை  2016 டெல்லி வாகனகண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவில்வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்புதான் பியட் நிறுவனம் ஜீப் மாடல்கள் மீண்டும் இந்தியாவில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜீப் வ்ரேங்க்ளர் மாடல் ஜீப் நிறுவனத்தின் கிளாச்சிக் வடிவத்தில்உள்ள மாடல். இது 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 3.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் நான்கு வில் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும்.

ஜீப் செரோக்கி மாடல் தற்கால வடிவமைப்பின்  அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடல். பகல்நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்,  டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம் குரூஸ் என அணைத்து வசதிகளும்இந்த மாடலில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 6.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.