2016 டெல்லி வாகன கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது மகிந்திரா XUV ஏரோ

மகிந்திரா நிறுவனம் புத்தம் புதிய XUV ஏரோ  எனும் SUV  கூப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இது XUV 500 மாடலின் அடிப்படையில் SUV மற்றும் கூப் என இரண்டு வடிவங்களையும் கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் முன்புறம் மற்றும் பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் தெரியவில்லை ஆப்படியே XUV 500 போலவே உள்ளது. பின்புறம் மட்டும் கூப் மாடல் போன்று சரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறம் கம்பீரமான தோற்றத்தையும் விலையுயர்ந்த கார் போலவும் தோற்றமளிக்கிறது. முன்புறத்தில் புதிய கிரில் LED  விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மாடல் 2.2 லிட்டர் மற்றும் புதிய 1.9 லிட்டர் என இரண்டு வித எஞ்சினிலும் வெளியிடப்படும் என தெரிகிறது. மேலும் இந்த மாடல் XUV 500  மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்படும். இந்த மாடல் வெளியிடப்பட்டால் இந்தியாவில் விலை குறைந்த SUV கூப் மாடலாக இது இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.