2016 டெல்லி வாகன கண்காட்சி: வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் நிறுவனம்  மேம்படுத்தப்பட்ட டஸ்டர் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இந்த மேம்படுத்தப்பட்ட டஸ்டர் மடலில் 32 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடலில் புதிய முன்புற கிரில், முகப்பு விளக்குகள், எலெக்ரிகலில்  இயங்கக்கூடிய பக்கவாட்டுக் கண்ணாடி, ரூப் ரயில், குரூஸ் கண்ட்ரோல், பின்புற LED விளக்குகள், புதிய இருக்கை துணி, தானியங்கி குளிரூட்டி மற்றும் புதிய மீடியா சிஸ்டம் என 32  அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்திற்கும் மேலாக இந்த மாடல் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமாடிக்  கியர் பாக்சிலும் கிடைக்கும். AMT கியர் பாக்சிற்கு மக்களை மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் அனைத்து நிறுவனங்களும் தற்போது AMT மாடல்களை வெளியிடுகின்றன. இந்த ஆட்டோமாடிக்  கியர் பாக்ஸ் மாடல் சாதாரண மாடலை விட சற்று விலை அதிகமாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.