2016 டெல்லி வாகன கண்காட்சி: விதவிதமான க்விட் மாடல்களை காட்சிப்படுத்தியது ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் கஷ்டமைஸ் செய்யப்பட்ட இரண்டு விதமான க்விட் மாடல்களையும், 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் AMT கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களையும்  2016 டெல்லி வாகன கண்காட்சியில்காட்சிப்படுத்தியது.

முன்னதாக 1.0 லிட்டர் எஞ்சின் மற்றும் AMT கியர் பாக்ஸ் கொண்ட க்விட் மாடல் மட்டும் தான் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெனால்ட் நிறுவனம்  ராக் கிளைம்பர் மற்றும் ரேசர் எனும் இரண்டு கஷ்டமைஸ் செய்யப்பட்ட க்விட் மாடல்களையும் காட்சிக்கு வைத்திருந்தது.

AMT கியர்  பாக்ஸ் கொண்ட மாடலில் எல்லா மாடலிலும் இருப்பது போன்று கியர் லிவர் கொடுக்கப்படாமல் டேஸ் போர்டில் டிரைவ் , நியுட்ரல் மற்றும் ரிவேர்ஸ் எனும் மூன்று ஆப்சன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் . ராக் கிளைம்பர் மற்றும் ரேசர் எனும் இரண்டு கஷ்டமைஸ் மாடல்களும் மிகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த கஷ்டமைஸ் மாடல்கள் விற்ப்பனைக்குகிடைக்குமா என்பது சந்தேகமே.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.