2016 டெல்லி வாகன கண்காட்சி: டாடா நிறுவனம் ஹெக்சா MPV மாடலை வெளிப்படுத்தியது

டாடா நிறுவனம் ஹெக்சா MPV மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இந்த மாடல் இந்த வருடத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் டீசல் என்ஜினில் மட்டும் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்பதற்கு சற்று ஏரியா மாடல் போன்று தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இது 154 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸில் கிடைக்கும்.  

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடலில் 4*4 என பேட்ச் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாடல் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் என இரண்டிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.