2016 டெல்லி வாகன கண்காட்சி: வெளிப்படுத்தப்பட்டது டாடா நெக்சன் காம்பேக்ட் SUV

டாடா நிறுவனம் நெக்சன் காம்பேக்ட் SUV மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இது டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில்வடிவமைக்கப்பட்டது.

இதன் கான்செப்ட் மாடல் சில வருடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. இந்த தயாரிப்பு நிலைமாடளுக்கும் கான்செப்ட் மாடளுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை. இது ஒரு SUV என்று சொல்லப்பட்டாலும்  ஹேட்ச்பேக்  போன்ற தோற்றத்தை தருவதை தவிர்க்க முடியவில்லை. எனினும் தரை இடைவெளி அதிகமாக இருக்கும்.  மேலும் உட்புறத்தில் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயிப்பதில் டாடா நிறுவனத்தை அடித்துக்கொள்ள யாரும் இல்லை அந்த வகையில் இந்த மாடலும் சவாலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.