2016 டெல்லி வாகன கண்காட்சி: காட்சிப்படுத்தப்பட்டது டாடா கைட் 5 காம்பேக்ட் செடான்

டாடா நிறுவனம் சீக்கா மாடலின் அடிப்படையில் உர்வாக்கப்பட்ட டாடா கைட் 5 எனும் காம்பேக்ட் செடான் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது டாடா நிறுவத்தின் இரண்டாவது காம்பேக்ட் செடான் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கா  மாடலை அப்படியே பின்புறத்தை மட்டும் மாற்றி செடான் மாடலாக வடிவமைத்துள்ளது. இருப்பினும் பின்புற வடிவத்தை சற்று சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம்.  இந்த மாடலும் சீக்கா  மாடலை போலவே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும்.

இந்த மாடல் அடுத்த வருட ஆரம்பத்தில் அல்லது இந்த வருட இறுதியில் வெளியிடப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.