2016 டெல்லி வாகன கண்காட்சி: இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலை வெளிப்படுத்தியது டொயோடா

டொயோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இந்த மாடலை டொயோடா நிறுவனம் நவம்பர் 23 ஆம் தேதி இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியது.  விரைவில் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய முன்புற கிரில், புதிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் மட்டும் பனி விளக்குகள் ஆகியாவை புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்திலும் அதிக சொகுசான அனுபவத்தை தரும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டேஸ் போர்டு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

2016  டொயோடா  இன்னோவா மாடலின்  என்ஜினும் மாற்றப்பட்டுள்ளது. புதிய 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 147 Bhp திறனையும் 360 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும்  வெளியிடப்படும். இது 137 Bhp திறனையும் 183 Nm இழுவைதிறனையும் வழங்கும். பழைய மாடலுக்கும் இதற்கும் விலையில் அதிக  மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.