2016 ஆம் ஆண்டு பட்ஜெட்: கூடுதல் வரியால் விலை உயரும் கார் விலைகள்

2016-17ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.  மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி, அனைத்து ரக கார்கள் மீதும் ஒரு சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என தெரிகிறது.

10 லட்சத்திற்கு மேல் அதிகம் விலை உள்ள கார்கள் மீது 1% வரியும், சிறிய டீசல் கார்கள் மீது 2.5% வரியும் மட்டும் பெரிய டீசல் என்ஜின்  கார்கள் மீது 4% வரியும் கூடுதலாக விதிகப்பட்டுள்ளது. மேலும் சிறிய ரக கார்கள் மீதும் 1% வரி கூடுதலாக விதிகப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கார்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாடு முழுவதும் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.97,000 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.