ரூ. 32.2 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு ஆடி Q3 பெட்ரோல்

ஆடி நிறுவனம் பெட்ரோல் என்ஜினுடன் கூடிய Q3 மாடலை ரூ. 32.2 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது Q  சீரீஸில் வெளியிடப்பட்ட முதல் பெட்ரோல் என்ஜின் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே  இந்த மாடல் 2.0-TDI FWD மற்றும் 2.0-TDI குவாட்ரோ  என இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது.  2.0-TDI FWD மாடல் ரூ. 34.2 லட்சம் விலையிலும் மற்றும் 2.0-TDI குவாட்ரோ மாடல் ரூ. 37.2 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

இந்த மாடலில் 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் TFSI பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த என்ஜின் 150 Bhp திறனையும் 250  Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் புதிய 6 ஸ்பீட் கொண்ட S-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது இதன் மூலம் திறன் முன்புற வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 8.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடல் லிட்டருக்கு 16.9 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

பனரோமிக் சான் ரூப்,17 இன்ச் அலாய் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆறு காற்றுப்பைகள், தோல் இருக்கை, எலெக்ட்ரிக் சீட் உயரம் மாற்றுதல், முகப்பு மற்றும் பின்புற LED விளக்குகள் என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.