ரூ. 34.2 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு ஆடி Q3

ஆடி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட Q3 மாடலை ரூ. 34.2 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. சில ஒப்பனை மாற்றங்களையும் என்ஜினில் சில மாற்றங்களையும் செய்து இந்த மாடலை வெளியிட்டுள்ளது ஆடி நிறுவனம். இந்த மாடல் 2.0-TDI FWD மற்றும் 2.0-TDI குவாட்ரோ  என இரண்டு வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது.  2.0-TDI FWD மாடல் ரூ. 34.2 லட்சம் விலையிலும் மற்றும் 2.0-TDI குவாட்ரோ மாடல் ரூ. 37.2 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்புற பம்பர், ஏர் இன்லெட், பாடி கிளைடிங், பனரோமிக் சான் ரூப், அலாய் வீல், எலெக்ட்ரிக் சீட் உயரம் மாற்றுதல், முகப்பு மற்றும் பின்புற LED விளக்குகள் ஆகியவை இந்த மாடலில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜின் 2.0-TDI FWD மாடலில் 148 Bhp திறனையும் 2.0-TDI குவாட்ரோ மாடலில் 182 Bhp திறனையும் வழங்குமாறு டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடலிலும் 7 ஸ்பீட் கொண்ட S-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 2.0-TDI FWD மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 9.3 வினாடிகளிலும் 2.0-TDI குவாட்ரோ மாடல் 7.9 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.