ரூ 49.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு BMW 5 சீரீஸ்

ஜெர்மனியை சேர்ந்த BMW நிறுவனம் புத்தம் புதிய 2017 ஆம் ஆண்டு 5 சீரீஸ் சலூன் மாடலை ரூ 49.9 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த ஏழாம் தலைமுறை சொகுசு கார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் 530i, 520d Sport line, 520d Luxury line மற்றும் 530d M Sport என ஒரு பெட்ரோல் மற்றும் மூன்று டீசல் வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:

530i Sport Line - ரூ 49.9 லட்சம் 
520d Sport Line - ரூ 49.9 லட்சம் 
520d Luxury Line - ரூ 53.6 லட்சம் 
530d M Sport - ரூ 61.3 லட்சம் 

இந்த மாடல் 7 சீரீஸ் மாடல் தயாரிக்கப்படும் அதே OKL பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 7 சீரீஸ் மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. LED முகப்பு விளக்குகள், கிளைமேட் கன்ட்ரோல், மசாஜ் வசதியுடன் கூடிய எலெக்ட்ரிக் இருக்கை என ஏராளமான வசதிகள் இந்த மாடலில்  கொடுக்கப்பட்டுள்ளது.

530i மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 248Bhp திறனையும் 350Nm இழுவைத்திரனையும் வழங்கும். 520d மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190Bhp திறனையும் 400Nm இழுவைத்திரனையும் வழங்கும் . அதே போல் 530d மாடலில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 261Bhp திறனையும் 620Nm இழுவைத்திரனையும் வழங்கும். அனைத்து மாடல்களிலும் எட்டு ஸ்பீட் ZF ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.