ரூ. 8.5 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு ஹோண்டா சிட்டி

ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு சிட்டி மாடலை ரூ. 8.5 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. தற்போது ZX எனும் புதிய டாப் வேரியன்ட் சேர்க்கப்பட்டுள்ளது அதே போல் E எனும் பேஸ் வேரியன்ட் நீக்கப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல் 
S - ரூ. 8.50 லட்சம்
SV - ரூ. 9.54 லட்சம்
V - ரூ. 10 லட்சம்
V CVT: - ரூ. 11.54 லட்சம்
VX - ரூ. 11.65 லட்சம் 
VX CVT - ரூ.12.85 லட்சம்
ZX CVT - ரூ. 13.53 லட்சம்

டீசல் 
SV - ரூ. 10.76 லட்சம்
V - ரூ. 11.56 லட்சம்
VX - ரூ. 12.87 லட்சம்
ZX - ரூ. 13.57 லட்சம்

முன்புறத்தில் கிரில், முகப்பு விளக்குகள் மற்றும் முன்புற வடிவம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. பின்புறத்தில் விளக்குகள் மற்றும் பம்பர் சிறிது  மாற்றப்பட்டுள்ளது.  உட்புற வடிவமைப்பிலும் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும்1.5 லிட்டர் டீசல்  என்ஜினிலேயே தான் கிடைக்கும்.

 பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  17.8 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  18 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

அதே போல்   டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 25.1 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி மாடல் மாருதி சுசூகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, வோல்க்ஸ் வேகன் வெண்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.