ரூ. 9.39 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2017 ஹுண்டாய் க்ரெடா

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு க்ரெடா மாடலை ரூ 9.39  லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலிலும் எலைட் i20 போலவே சில புதிய உபகரணங்களும் புதிய இரட்டை வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.

இந்த மாடல் புதிதாக இரட்டை வண்ணத்தில் கிடைக்கிறது. இந்த இரட்டை வண்ணம் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணத்தில் SX+ வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.  உட்புறத்தில் புதிய சிவப்பு நிற அலங்காரங்களும் 7.0 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.6 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இந்த மாடல் ரெனோ டஸ்ட்டர், நிசான் டெர்ரானோ, ஹோண்டா BR-V, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் டாடா சஃபாரி ஸ்டார்ம் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.