ரூ 30.65 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் GLA

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆரம்ப நிலை SUV மாடலான GLA மாடலின்    மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு GLA  மாடலை ரூ 30.65 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் மேலும் புதிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஒரு பெட்ரோல் மற்றும் மூன்று டீசல் வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த மாடல் டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்
GLA 200 Sport: ரூ 32.20 லட்சம்
டீசல்
GLA 200d Style: ரூ 30.65 லட்சம்
GLA 200d Sport: ரூ 33.85 லட்சம்
GLA 220d 4MATIC: ரூ 36.75 லட்சம்

வெளிப்புறத்தில் புதிய பம்பர், புதிய அலாய் வீல், புதிய LED முகப்பு விளக்குகள் மற்றும் மருவடிவமைக்கப்பட்ட ஏரோ டைனமிக் டிசைன் ஆகியவையும் உட்புறத்தில் புதிய 8 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், புதிய உட்புறம் மற்றும் புதிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 360  டிகிரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 

இதன் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது  183 bhp  திறனையும் 300 Nm  இழுவைத்திறனையும் வழங்கும்.மற்றும் இதன் டீசல் மாடலில் 2.1 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு வீல் டிரைவில் 136 bhp  திறனையும் 300 Nm  இழுவைத்திறனையும் நான்கு வீல் டிரைவில் 170 bhp  திறனையும் 350 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இதன் அனைத்து மாடல்களும் ஏழு ஸ்பீட் கொண்ட டியூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.