வெளிப்படுத்தப்பட்டது 2017 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் GLA

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆரம்ப நிலை SUV மாடலான GLA மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலை டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் மேலும் புதிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். 

வெளிப்புறத்தில் புதிய பம்பர், புதிய அலாய் வீல், புதிய LED முகப்பு விளக்குகள் மற்றும் மருவடிவமைக்கப்பட்ட ஏரோ டைனமிக் டிசைன் ஆகியவையும் உட்புறத்தில் புதிய 8 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், புதிய உட்புறம் மற்றும் புதிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 360  டிகிரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல் புதிதாக GLA220  வேரியண்டில் 4matic  எனும் ஆள் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கிறது. இந்த மாடலில் 184 bhp  திறனையும் 300 Nm  இழுவைத்திறனையும் வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் GLA200  மற்றும் GLA250 எனும் பெட்ரோல்  வேரியண்டிலும் கிடைக்கும். மேலும் டீசல் வேரியண்டில் மாற்றம் இல்லை.

மேலும் இந்த மாடல் GLA45 AMG எனும் வேரியண்டிலும் கிடைக்கும். இதன் AMG மாடல் எல்லோ நைட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பிலும் கிடைக்கும். இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது  376 bhp  திறனையும் 475 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் இந்தியாவில் ரூ.30  முதல் ரூ.35  லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.