ரூ 5.98 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு நிசான் மைக்ரா

நிசான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு மைக்ரா மாடலை ரூ 5.98 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில புதிய உபகரணங்களும் சில ஒப்பனை மாற்றங்களும் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஐரோப்பில் விற்பனையில் இருக்கும் ஐந்தாம் தலைமுறை மாடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
XL (CVT) - ரூ 5,98,431
XV (CVT) - ரூ 6,94,299
dCi XL - ரூ 6,61,344
dCi XL Comfort - ரூ 7,22,260

இந்த மாடலில் கூடுதலாக புதிய ஆட்டோமேட்டிக் ரெயின் சென்சிங் வைப்பர் மற்றும் ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஆரஞ்சு வண்ணத்திலும் இந்த மாடல் கிடைக்கும். மற்றபடி பெரிய மாற்றங்களும் ஏதும் செய்யப்படவில்லை. 

எஞ்சினிலும் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும் தான் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 76 bhp (6000 rpm) திறனும் 104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் டீசல் என்ஜின் மாடல் 64 bhp (4000 rpm) திறனும் 160Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் பெட்ரோல் மாடல் CVT கியர் பாக்சிலும் டீசல் மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்சிலும் கிடைக்கும்.  இதன் ஐந்தாம் தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.