ரூ. 15.49 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு ஸ்கோடா ஆக்டேவியா

ஸ்கோடா நிறுவனம் ரூ. 15.49 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு ஆக்டேவியா  மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

வெறியன்ட் வாரியாக ஷோ ரூம் விலை விவரம்:

பெட்ரோல்
Ambition 1.4 TSI MT - ரூ 15.49 லட்சம் 
Style 1.4 TSI MT - ரூ 17.49 லட்சம்
Style 1.8 TSI AT - ரூ 18.59 லட்சம்
Style Plus 1.8 TSI AT - ரூ 20.89 லட்சம்

டீசல் 
Ambition 2.0 TDI MT - ரூ 16.89 லட்சம்
Style 2.0 TDI MT - ரூ 18.95 லட்சம்
Style 2.0 TDI AT - ரூ 20.49 லட்சம்
Style Plus 2.0 TDI AT - ரூ 22.89 லட்சம்  

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய முன்புற முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள், முன்புற மற்றும் பின்புற பம்பர் அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் ஹேண்ட்ஸ் பிரீ பார்க்கிங் சிஸ்டம் போன்ற உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் எஞ்சினில் அந்த மாற்றமும் இல்லை அதே 1.4 & 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 140 bhp (4500-6000 rpm) திறனும் 250Nm (1500-3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த என்ஜின் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். இதன் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 180 bhp (5100-6200 rpm) திறனும் 250Nm (1250-5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த என்ஜின் ஏழு ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். இதன் டீசல் என்ஜின்  மாடல் 143 bhp (4000 rpm) திறனும் 320Nm (1750-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிசனில் கிடைக்கும். இந்த மாடல் ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் டொயோடா கரோலா ஆல்டிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.