அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட டொயோடா கரோலா

டொயோடா நிறுவனம் மேம்பாடுகப்பட்ட 2017 கரோலா மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. ரஸ்யாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த மாடல் வெளிப்படுத்தப்பட்டது.

சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் மட்டுமே இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் புதிய க்ரில், புதிய பகல் நேரத்தில் ஒளிரும் லேட் விளக்குகள், புதிய முகப்பு விளக்குகள் மற்றும் புதிய பெரிய பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. பின்புறத்தில் புதிய LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் சில  மாற்றங்கள்  மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேலும் என்ஜினில் மாற்றம் இல்லை அதே 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும்.  இந்த மாடல் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.