வெளிப்படுத்தப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஃபோர்டு முஸ்டங் கன்வெர்ட்டிபிள்

ஃபோர்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு முஸ்டங் கன்வெர்ட்டிபிள் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டு முஸ்டங் கூப் மாடலை வெளிப்படுத்தி மூன்றே நாட்களில் தற்போது கன்வெர்ட்டிபிள் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த  2018 ஆம் ஆண்டு மாடலில் முன்புற வடிவமைப்பு மற்றும் முகப்பு விளக்குகள் மாற்றப்பட்டுள்ளது. கூப் மாடலுக்கு இதற்கும் வெறும் மேற்கூரை மட்டுமே வித்தியாசம்.

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற மாடல்களில் ஃபோர்டு - முஸ்டங் மிகவும் குறிப்பிடத்தக்கது. தொடர்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலில் 19 இன்ச் அலாய் வீல், ஸெனான் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள், வாய்ஸ் கமெண்ட் 8 இன்ச் டச் ஸ்க்ரீன்  இன்போடைன்மெண்ட் சிஸ்டம்   என சகல வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் உலக அளாவில் மூன்று விதமான என்ஜினில் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் 5.0 லிட்டர் V8 பெட்ரோல் என்ஜினில் மட்டும் கிடைக்கும். இந்த என்ஜின் 437 Bhp திறனும் 540 இழுவைதிறனும் கொண்டது. இந்த திறன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மூலம் வீல்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலில் நார்மல், ஸ்போர்ட்+, ட்ராக் மற்றும் ஸ்னோ என நான்கு டிரைவிங் மொடுகள் உள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.