இந்தியாவில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஆடி RS5 கூப்

ஆடி நிறுவனம் புதிய  2018 ஆம் ஆண்டு RS5 கூப் மாடலை ரூ 1.1 கோடி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இது இரண்டாம் தலைமுறை RS5 மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஆடி நிறுவனம் இந்த வருடத்தில் வெளியிடும் இரண்டாவது மாடல் ஆகும். ஆடி RS5 மாடல் இந்தியாவில் Completely Built Unit (CBU) அடிப்படையில் வெளியிடப்பட உள்ளது. 

இந்த மாடல் புதிய எடை குறைவான பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளதால் முந்தய மாடலை விட 60 கிலோ குறைவான எடை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல் முந்தய மாடலை விட 74 மில்லி மீட்டர் அதிக நீளம் கொண்டதாகவும், 6 மில்லி மாட்டர் குறைவான உயரம் கொண்டதாகவும் மற்றும் 15 மில்லி மீட்டர் அதிக வீல் பேஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஆடி நிறுவனத்தின் LED மேட்ரிக்ஸ் முகப்பு விளக்குகள், பனரோமிக் சான் ரூப் மற்றும் 19 ஸ்பீக்கர் உடன் கூடிய இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் முந்தய V8 எஞ்சினுக்கு பதிலாக புதிய 2.9 லிட்டர் V6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 444bhp திறனையும் 600Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது முந்தய மாடலை விட 170Nm அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.