2018 ஆம் ஆண்டு ரெனோ டஸ்டர் வெளிப்படுத்தப்பட்டது

ரெனோ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு டேசியா டஸ்டர் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு பிராங்க்புர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ நிறுவனம் ரோமானியாவில் டேசியா எனும் பிராண்டில் மாடல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்புறத்தில் புதிய பானெட், பெரிய கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பம்பர், புதிய ஸ்கிட் பிளேட் ஆகியவையும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் மற்றும் புதிய வடிவமைப்பு என முழுவதும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் தொடர்பான அனைத்து விதமான விவரங்களும் பிராங்க்புர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும்.

இந்த மாடல் இந்தியாவில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் இரண்டு திறன்களிலும் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் கிடைக்கும். இதன்  டீசல் என்ஜின் 85 bhp (3750 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டதாகவும் மற்றும் 110 bhp (5750 rpm) திறனும் 245Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டதாகவும் கிடைக்கும். பெட்ரோல் என்ஜின்  மாடல்   104 bhp (5750 rpm) திறனும் 148Nm (3750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு விவரமும் தெளிவாக வெளியிடப்படவில்லை. ஆனால் ரெனோ நிறுவனம் விரைவில் கேப்டர் SUV  மாடலை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.