2018 டெல்லி வாகன கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது புதிய கியா SP SUV

ஹூண்டாய் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கியா நிறுவனம் முதல் முறையாக SP SUV மாடலை 2018  ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. கியா நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் நுழைய இருப்பது அனைவரும் அறிந்ததே. இதன் தயாரிப்பு நிலை மாடல் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இந்த மாடல் முழுமையான ஒரு SUV போன்ற தோற்றத்தை தருகிறது. LED விளக்குகள், பெரிய கிரில், இரட்டை வண்ணம், பெரிய பானெட் என சிறப்பான தோற்றத்தை இந்த மாடல் தருகிறது. இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் போது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ கேப்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் க்ரெட்டா மாடலில் உள்ள 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.