2018 டெல்லி வாகன கண்காட்சி: வெளியிடப்பட்டது புதிய ஜெனெரேஷன் மாருதி சுசூகி ஸ்விப்ட்

மாருதி சுசூகி நிறுவனம் இறுதியாக புதிய ஜெனெரேஷன் ஸ்விப்ட் மாடலை ரூ 4.99 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஜப்பானில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. பலேனோ மற்றும் டிசைர் மாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்மில் தான் இந்த புதிய ஸ்விப்ட் மாடலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் என முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கதவுக்கான கைப்பிடிகள் விண்ட் சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மாடல் 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சினில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  84.3bhp (6000 rpm) திறனும்  113Nm (4200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு என்ஜினும் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT கியர் பாக்சில் கிடைக்கும். இந்த மாடல் ஹூண்டாய் கிராண்ட் i10, ஹோண்டா ஜாஸ், வோல்க்ஸ் வேகன் போலோ மற்றும் போர்டு பிகோ போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்:

 • NEW SWIFT LXI - ரூ 4.99 லட்சம்
 • NEW SWIFT VXI - ரூ 5.87 லட்சம்
 • NEW SWIFT VXI AGS - ரூ 6.35 லட்சம்
 • NEW SWIFT ZXI - ரூ 6.49 லட்சம்
 • NEW SWIFT ZXI AGS - ரூ 6.96 லட்சம்
 • NEW SWIFT ZXI+ - ரூ 7.29 லட்சம்

டீசல் 

 • NEW SWIFT LDI - ரூ 5.99 லட்சம்
 • NEW SWIFT VDI - ரூ 6.87 லட்சம்
 • NEW SWIFT VDI AGS - ரூ 7.34 லட்சம்
 • NEW SWIFT ZDI - ரூ 7.49 லட்சம்
 • NEW SWIFT ZDI AGS - ரூ 7.96 லட்சம்
 • NEW SWIFT ZDI+ - ரூ 8.29 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.