ஜூலை 14 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் புத்தம் புதிய 2018 ஆம் ஆண்டு ஹோண்டா அக்கார்ட்

ஹோண்டா நிறுவனம் பத்தாம் தலைமுறை ஹோண்டா அக்கார்ட் மாடலை ஜூலை 14 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. என்ஜின் மற்றும் வடிவமைப்பு என நிறைய மாற்றங்கள் இந்த மாடலில் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் அமெரிக்க சந்தையில் ஒரு சில மாதங்களிலும் மற்ற சந்தைகளில் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம் அக்கார்ட் மாடலின் டீசர் படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் டீசல், பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என்ஜின்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஜூலை 14 ஆம் தேதி தெரியவரும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.