ரூ 7.35 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோன்டா ஜாஸ்

ஹோன்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஜாஸ் மாடலை ரூ 7.35 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. மேலும் இந்த மாடல் இரண்டு புதிய வண்ணங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:

Petrol - 

  • V MT - ரூ 7.35 லட்சம் 
  • VX MT - ரூ 7.79 லட்சம் 
  • V CVT - ரூ 8.55 லட்சம் 
  • VX CVT - ரூ 8.99 லட்சம் 

Diesel -

  • S MT - ரூ 8.05 லட்சம் 
  • V MT - ரூ 8.85 லட்சம் 
  • VX MT - ரூ 9.29 லட்சம் 

இந்த புதிய 2018 ஆம் ஆண்டு ஹோன்டா ஜாஸ் மாடலில் புஷ் பட்டன் ஸ்டார்ட், 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், முன்புற சென்டர் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய LED பின்புற விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தய மாடலில் கொடுக்கப்பட்டிருந்த மேஜிக் இருக்கை இந்த புதிய மாடலில் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் இரண்டு புதிய வண்ணங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும். இதன்  பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும், இதன்  டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் பெட்ரோல் மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் (CVT) டிரான்ஸ்மிஷன் தேர்விலும், டீசல் மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் தேர்விலும் கிடைக்கும். இந்த மாடல் மாருதி சுசூகி பலேனோ, வோல்க்ஸ்வேகன் போலோ மற்றும் ஹூண்டாய் எலைட் i20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.