வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஆம் ஆண்டு XUV500 மாடலை ரூ 12.32 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் செயல்திறனில் சில மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக புதிய 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500 விலை விவரங்கள் (மும்பை ஷோரூம்):
டீசல்:

 • W5 - ரூ 12,32,036
 • W7 - ரூ 13,58,036
 • W7 AT - ரூ 14,78,036
 • W9 - ரூ 15,23,036
 • W9 AT - ரூ 16,43,036
 • W11 - ரூ 16,43,036
 • W11 AT - ரூ 17,63,036
 • W11(O) - ரூ 16,68,036
 • W11(O) AT - ரூ 17,88,036
 • W11 (O) AWD - ரூ 17,78,036
 • W11 (O) AWD AT - ரூ 18,98,036

பெட்ரோல்:

 • G AT - ரூ 15,43,038

புதிய 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500 மாடலின் முன்புறத்தில் புதிய கிரில், புதிய பம்பர், புதிய முகப்பு விளக்குகள் ஆகியவையும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள், பின்புற வடிவமைப்பு, பின்புற பம்பர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மாடலில் புதிய அலாய் வீல், ரூப் ஸ்பாய்லர் மற்றும் சில புதிய உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறத்தில் புதிய தோல் இருக்கை மற்றும் டாப் வேரியன்டில் டேஸ் போர்டில் லெதர் பினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தய மாடலில் உள்ள 7-இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். எனினும் இதன் திறன் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 155bhp (3750 rpm) திறனும் 360Nm (1750-2800rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இது முந்தய மாடலை விட 15bhp திறனும் 30Nm  இழுவைதிறனும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் டீசல் எஞ்சின் மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் அதே முந்தய 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும் கிடைக்கும். இந்த எஞ்சினின் செயல்திறனில் மாற்றம் இல்லை, அதே 140bhp (4500 rpm) திறனும் 320Nm (2000-3000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் தான் கொண்டது. மேலும் இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆறு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் டாடா ஹெக்ஸா, ஜீப் காம்பஸ் மற்றும் ரெனோ கேப்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.