ரூ 40 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய 2018 மெர்சிடிஸ் பென்ஸ் C-கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2018 C-கிளாஸ் மாடலை ரூ 40 லட்சம் ஆரம்ப ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மேம்பாடுகளும், புதிய என்ஜினும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய பம்பர், புதிய மற்றும் பெரிய கிரில் மற்றும் புதிய முகப்பு விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பெரிய மாற்றகம் ஏதும் இல்லை, எனினும் புதிய இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறம் சில வித இருக்கை லெதர் மற்றும் மாற வேலைப்பாடு தேர்வில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சினில் மட்டும் இரண்டு வித திறனில் கிடைக்கும். C220d வேரியன்டில் 194PS திறன் 400Nm இழுவைத்திறன் கொண்ட என்ஜினும், C300d வேரியன்டில் 245PS திறன் 500Nm இழுவைத்திறன் கொண்ட என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடலிலுமே 9G-Tronic ட்ரான்ஸ் மிஷன்சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் AMG வேரியன்ட் அடுத்த வருட ஆரம்பத்தில் தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வேரியன்ட் வாரியாக இதன் ஷோரூம் விலை விவரம்:

  • மெர்சிடிஸ் பென்ஸ் C-கிளாஸ் C220d Prime- ரூ 40 லட்சம் 
  • மெர்சிடிஸ் பென்ஸ் C-கிளாஸ் C220d Progressive- ரூ 44.25 லட்சம் 
  • மெர்சிடிஸ் பென்ஸ் C-கிளாஸ் C300d AMG Line- ரூ 48.50 லட்சம் 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.