ரூ 2.19 கோடி விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் G-கிளாஸ் SUV

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இரண்டாம் தலைமுறை G-கிளாஸ் SUV மாடலின் G 63 AMG வேரியன்டை ரூ 2.19 கோடி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட G-கிளாஸ் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் G-கிளாஸ் SUV மாடலை மேம்படுத்தியுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் மிக நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் மாடல்களில் G-கிளாஸ் SUV மாடலும் ஒன்று. இந்த மாடல் முதன் முதலில் 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் G-கிளாஸ் பாரம்பரிய பாக்சி வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யாவில்லை, எனினும் நிறைய புதிய டிசைன் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த சொகுசு மற்றும் ஆப் ரோடு என இரண்டையும் விரும்புவோருக்கு இந்த மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். 

இந்த மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 576Bhp திறனையும் 850Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த திறன் 9G-Tronic 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 4MATIC ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது.  இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மேலும் அதிகபட்சமாக மணிக்கு 220 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.