2018 நியூ யார்க் வாகன கண்காட்சி: வெளிப்படுத்தப்பட்டது ஜாகுவார் F-பேஸ் SVR

ஜாகுவார் நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட F-பேஸ் SUV மாடலின் பெர்பார்மன்ஸ் வெர்சனான F-பேஸ் SVR மாடலை 2018 ஆம் ஆண்டு நியூ யார்க் வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளது. F-பேஸ் SVR மாடலில் அதிக செயல்திறன் கொண்ட எஞ்சினும் மேலும் சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

F-பேஸ் SVR மாடலில் புதிய ஸ்போர்ட்டியான பம்பர், கூடுதல் ஏர் வென்ட், புதிய 22 இன்ச் அலாய் வீல், SVR பேட்ச், உட்புறம் முழுவதும் தோல் வேலைப்பாடுகள், இரட்டை டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் கன்சோல் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த செயல்திறனுக்காக சஸ்பென்ஷன் மற்றும் சேஸ் போன்றவற்றிலும் சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

F-பேஸ் SVR மாடலில் 5.0 லிட்டர் V8 சூப்பர் சார்ஜ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 542bhp திறனையும் 680Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் கடந்து விடும் வல்லமை கொண்டது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 283 கிலோமீட்டர் வேகம், வரையும் செல்லும். மேலும் இந்த மாடல் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.