ரூ 5.25 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய டாடா டிகோர்

டாடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டிகோர் செடான் மாடலை ரூ 5.25 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் வாசிகளும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம், இந்த மாடல் வெளியிடப்பட்டு இரண்டு வருடத்திற்க்குளாகவே மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்:

 • டிகோர் XE - ரூ 5,25,197
 • டிகோர் XM - ரூ 5,62,778
 • டிகோர் XZ - ரூ 6,02,778
 • டிகோர் XZ+ - ரூ 6,56,777
 • டிகோர் XZA - ரூ 6,72,777

டீசல்:

 • டிகோர் XE - ரூ 6,14,285
 • டிகோர் XM - ரூ 6,48,877
 • டிகோர் XZ - ரூ 6,91,905
 • டிகோர் XZ+ - ரூ 7,45,906

புதிய 2018 டாடா டிகோர் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்: 

 • டைமண்ட் முகப்பு கிரில்
 • குரோம் லைன்ட் கைப்பிடி 
 • புதிய 15 இச் அலாய் வீல் 
 • கிரிஸ்டல் LED பின்புற விளக்குகள் 
 • புதிய ஸ்பார்க்ளிங் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
 • ஷார்க் பின் ஆட்டேனா
 • புதிய 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே  1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் 20.3 Kmpl மைலேஜையும், டீசல் மாடல் 24.7 Kmpl மைலேஜையும் வழங்கும். 

இந்த மாடல் ஹோண்டா அமேஸ், வோல்க்ஸ் வேகன் அமியோ, டாடா செஸ்ட், போர்ட் ஆஸ்பயர், மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசைர் மற்றும் ஹூண்டாய் எக்ஸன்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.