இந்தியாவில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு டொயோடா லேன்ட் குரூஸர் ப்ராடோ

டொயோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு லேன்ட் குரூஸர் ப்ராடோ மாடலை ரூ 92.60 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை.

2018 ஆம் ஆண்டு டொயோடா லேன்ட் குரூஸர் ப்ராடோ மாடலில் புதிய முகப்பு கிரில், புதிய LED முகப்பு விளக்குகள், புதிய அலாய் வீல், புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் ஆகியவையும், உட்புறத்தில் புதிய இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், புதிய ஸ்டீரிங் வீல் மற்றும் புதிய உட்புற அலங்காரம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 3.0 லிட்டர் D-4D டர்போ டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 173 PS @ 3400 rpm திறனையும் 410 Nm @ 1600-2800 rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் VXL எனும் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடல் CBU சிஸ்டம் மூலம் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.