ரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்

இறுதியாக, ஹோண்டா நிறுவனம் பத்தாம் தலைமுறை சிவிக் மாடலை ரூ 17.70 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ஹோண்டா சிவிக் மாடல் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்:

  • V CVT - ரூ 17.70 லட்சம் 
  • VX CVT - ரூ 19.20 லட்சம் 
  • ZX CVT - ரூ 21 லட்சம் 

டீசல்:

  • VX MT - ரூ 20.50 லட்சம் 
  • ZX MT - ரூ 22.30 லட்சம் 

2019 ஆம் ஆண்டு ஹோண்டா சிவிக் மாடல் 1.8-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6-லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 141PS திறனையும் 174Nm இழுவைத்திறனையும் மனற்றும் டீசல் எஞ்சின் 120PS திறனையும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இதன் பெட்ரோல் எஞ்சின் CVT டிரான்ஸ்மிஷன் தேர்விலும் டீசல் எஞ்சின் மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் மட்டுமே கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல் 16.5kmpl மைலேஜும் மற்றும் டீசல் எஞ்சின் மாடல் 26.8kmpl மைலேஜும் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. 

இந்த மாடலில் நான்கு காற்றுப்பை, வெஹிகிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பின்புற பார்க்கிங் சென்சார், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், குரூஸ் கன்ட்ரோல், 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் டொயோட்டா கரோலா ஆல்டிஸ் போன்ற ப்ரீமியம் சேடன் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.