வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஜீப் ரெனெகேட்

ஜீப் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ரெனெகேட் மாடலை டுரின் மோட்டார் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் மட்டும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உட்புறம் தொடர்பான படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் உலகளவில் கூடுதலாக புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடனும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்புற வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய முன்புற கிரில், முகப்பு விளக்குகள், டர்ன் இண்டிகேட்டர், பனி விளக்குகள், முன்புற பம்பர், பின்புற பம்பர், பின்புற LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் உட்புறம் தொடர்பான படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபியட் நிறுவனம் ஜீப் ரெனெகேட் மாடலை இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது. மேலும் இந்த மாடல் இந்தியாவில்  1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் ரெனெகேட் வெளியிடப்பட்டால் ஹூண்டாய் க்ரெடா, ரெனோ டஸ்டர், நிசான் டெர்ரானோ போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.