வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சுனர்

டொயோட்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சுனர் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல்களின் விலையிலும் வேரியன்ட்டிற்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலில் பாஸ்ட் சார்ஜிங் USB, ஐவரி லெதர், ஹீட் ரிஜெக்சன் கிளாஸ் ஆகியவை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2019 ஆம் ஆண்டு ஃபார்ச்சுனர் மாடலில் புதிய Chamois வண்ண உட்புறம் மற்றும் ஹீட் ரிஜெக்சன் கிளாஸ் ஆகியவை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா:

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 2.8 லிட்டர் & 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் 2.8 லிட்டர் ஆட்டோமேட்டிக் டீசல் என்ஜின் 174 bhp திறனும் 360Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் 2.4 லிட்டர் மேனுவல் டீசல் என்ஜின் 150 bhp திறனும் 343Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது மற்றும் இதன் பெட்ரோல் எஞ்சின் 164 bhp திறனும் 245Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:

டொயோட்டா ஃபார்ச்சுனர்:

இந்த மாடலின் எஞ்சினிலும் எந்த மாற்றமும் இல்லை, அதே  2.8 லிட்டர்  டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கிறது. 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166 bhp  திறனும் 245Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  2.8 லிட்டர் டீசல் என்ஜின் 177 bhp  திறனும் 420Nm(மேனுவல்) & 450Nm (ஆட்டோமேட்டிக்) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு என்ஜினுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.  ஆனால் 4 வீல் டிரைவ் சிஸ்டம் டீசல் எஞ்சினில் மட்டும் தான் கிடைக்கும் பெட்ரோல் மாடலில் இல்லை. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.