310 Bhp திறன் கொண்ட DC அவன்டி சிறப்பு பதிப்பு

310 Bhp  திறன் கொண்ட DC அவன்டியின் சிறப்பு பதிப்பு வெளிப்படுத்தப்பட்டது. இது பழைய மாடலில் இருந்து 60 Bhp  அதிக திறன்  தரும். இந்த கார்  இந்தியாவிலேயே இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். காரின் வடிவத்தை வாடிக்கையாளருக்கு ஏற்றவாறு கஷ்டமைஸ் செய்து தருவதில் பெயர் பெற்ற நிறுவனமான DC டிசைன் நிறுவனம் தான் இந்த ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு பதிப்பு கிரே மற்றும் ஆரஞ்சு கலந்த கலவை, வெள்ளை மற்றும் ப்ளூ கலந்த கலவை மற்றும் கிரே மற்றும் பச்சை  கலந்த கலவை என மூன்று விதங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் வெறும் 31 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு வாகன கண்காட்சியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு பதிப்பு பழைய மாடலை விட 9 லட்சம் அதிகம் விலை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.