க்விட் மாடலுக்கு ஏழு புதிய கிராபிக்ஸை அறிமுகப்படுத்தியது ரெனோ

ரெனோ நிறுவனம் க்விட் மாடலுக்கு ஏழு விதமான புதிய கிராபிக்ஸ் டிசைனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்போர்ட், ரேலி கிராஸ், ரேஸ், சேஸ், ஜிப், டர்போ மற்றும் கிளாசிக் என ஏழு விதமான கிராபிக்ஸ் டிசைன்களில் க்விட் லைவ் பார் மோர் எடிசன் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ரெனோ நிறுவனம் சந்தையில் நிலைத்து நிற்க தொடர்ந்து சில மேம்பாடுகளை அறிமுகப்படுத்திய வருகிறது.

இந்த மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கும். இதன் 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும்  இதன் 1.0 லிட்டர் என்ஜின் 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT கியர் பாக்சில் கிடைக்கும். இந்த மாடல் ரூ 2.78 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.