வெளிப்படுத்தப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஜீப் வ்ரேங்க்ளர்

ஜீப் நிறுவனம் இறுதியாக மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடலை தற்போது நடைபெற்று வரும் 2017 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் ஒப்பனை மாற்றங்களும், சில கூடுதல் உபகரணங்களும் மற்றும் புதிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன் வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடலில் புதிய LED முகப்பு விளக்குகள் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் இரண்டு மற்றும் நான்கு கததவுகளுடனும் கிடைக்கும். இந்த மாடல் ஸ்போர்ட், சஹாரா மற்றும் ரூபிகார்ன் என மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.

2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடலின் உட்புறம் வெளித்தோற்றத்தை போல அல்லாமல் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், புதிய ட்வின் டயல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் என ஏராளமான புதிய அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புற வண்ணத்திற்கு ஏற்றவாறு உட்புறத்தில் அலங்காரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் புதிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 3.0 லிட்டர் மற்றும் 3.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்தியாவில் இந்த மாடல் வெளிநாடுகளில் வெளியிட்ட பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் அமெரிக்க மார்க்கெட்டில் 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடல் தொடர்பான செய்திகளுக்கு மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.