2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடலின் படங்களை வெளியிட்டது ஜீப்

 ஜீப் நிறுவனம் முதன் முறையாக மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடலின் படங்களை வெளியிட்டுள்ளது. ஜீப் நிறுவனம் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற SEMA எனும் சிறப்பு வாகனங்களுக்கான நிகழ்ச்சியில் இந்த படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல் இந்த மாத  இறுதியில் நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட உள்ளது. 

இந்த படங்களை வைத்து பார்க்கும் போது இதன் வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடலில் புதிய LED முகப்பு விளக்குகள் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் இரண்டு மற்றும் நான்கு கததவுகளுடனும் கிடைக்கும். உட்புறம் தோற்றம் தொடர்பான படங்கள் ஏதும் வெளியிடப்பட வில்லை. எனினும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்போர்ட், சஹாரா மற்றும் ரூபிகார்ன் என மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும். 

இந்தியாவில் இந்த மாடல் வெளிநாடுகளில் வெளியிட்ட பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் இந்த மாடல் வெளிப்பட்டாலும் எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 200 Bhp திறனையும் 460 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடல் தொடர்பான செய்திகளுக்கு மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.