ரூ 8.19 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூகி சியாஸ்

மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய சியாஸ் மாடலை ரூ 8.19 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல் 

  • Sigma - ரூ 8.19 லட்சம்
  • Delta - ரூ 8.80 லட்சம்
  • Zeta - ரூ 9.57 லட்சம்
  • Alpha - ரூ 9.97 லட்சம்
  • Delta AT - ரூ 9.80 லட்சம்
  • Zeta AT - ரூ 10.57 லட்சம்
  • Alpha AT - ரூ 10.97 லட்சம்

டீசல்  

  • Sigma - ரூ 9.19 லட்சம்
  • Delta - ரூ 9.80 லட்சம்
  • Zeta - ரூ 10.57 லட்சம்
  • Alpha - ரூ 10.97 லட்சம்

புதிய மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலில் புதிய முகப்பு க்ரில், புதிய முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், புதிய அலாய் வீல், முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்திலும் சில ஒப்பனை மாற்றங்களும் புதிய 4.2 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. பொத்தான் ஸ்டார்ட், குரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் AC, பின்புற பார்க்கிங் சென்சார், காற்றுப்பை, ABS மற்றும் EBD என முந்தய மாடலில் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 

புதிய மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடல் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் முந்தய 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் தேர்வில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 103bhp (6000rpm) திறனும் 138Nm (4400rpm) டார்க் எனும் இழுவைதிறனும், டீசல் என்ஜின் 90bhp (4000rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. பெட்ரோல் எஞ்சின் மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் நான்கு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்விலும், டீசல் மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கும். மேலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் மாடல் 21.56kmpl மைலேஜும், AMT டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் மாடல் 21.28kmpl மைலேஜும் மற்றும் டீசல் மாடல் 28.09kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.