67,000 டாலர் விலையில் வெளியிடப்பட்டது ஆடி Q8 SUV

ஆடி நிறுவனம் Q8 SUV மாடலை 67,000 டாலர் ஆரம்ப விலையில் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. ஆடி நிறுவனம் Q8 கான்செப்ட் SUV மாடலை டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் 80 களில் ஆடி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Ur-கோட்ரோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் தான் ஆடி நிறுவனத்தின் அதிக விலை கொண்ட Q-சீரீஸ் மாடல் ஆகும்.

இந்த மாடல் SUV மற்றும் கூப் வடிவமைப்பின் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஆடி நிறுவனத்தின் புதிய MLB EVO பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4.99 மீட்டர் நீளமும், 2.0 மீட்டர் அகலமும் 1.71 மீட்டர் உயரமும் கொண்டது. மேலும் இந்த மாடல் 2.987 மீட்டர் வீல் பேசும் கொண்டது. இந்த மாடல் மிகப்பெரிய மாடலாக இருந்தாலும் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 335 Bhp திறனையும் 500 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆடி நிறுவனத்தின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடல் மேலும் சில எஞ்சின் தேர்வுகளிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் MHEV எனும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ள அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் மூலம் இந்த மாடலின் உயரத்தை மாற்றிக்கொள்ள முடியும். இந்த மாடலின் தரை இடைவெளியை அதிகபட்சமாக 245 மில்லி மீட்டர் வரை அதிகரித்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடல் 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.