ரூ 9.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய மஹிந்திரா மராஸோ

மஹிந்திரா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புத்தம் புதிய மஹிந்திரா மராஸோ MPV மாடலை ரூ 9.99 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. மராஸோ மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மடலில் புதிய எஞ்சின், புதிய சரௌண்ட் கூல் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திராவின் வட அமெரிக்கா டிசைன் சென்டரில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் சுறாவை (Shark) அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல XUV500 மாடலை சிறுத்தையின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டும் TUV300 மாடலை ராணுவ டேங்கை அடிப்படையாக கொண்டும் மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக மஹிந்திரா மராஸோ மாடலின் விலை விவரம்:
Mahindra Marazzo M2 – ரூ 9.99 லட்சம்
Mahindra Marazzo M4 – ரூ 10.95 லட்சம்
Mahindra Marazzo M6 – ரூ 12.40 லட்சம்
Mahindra Marazzo M8 – ரூ 13.90 லட்சம்

இந்த மாடலும் மற்ற மஹிந்திரா மாடல்கள் போலவே பாடி-ஆன்-பிரேம் எனும் கட்டமைப்பில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிறப்பான வெளிப்புற வடிவமைப்பு கொண்டதாகவும், உட்புறத்தில் அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் ஆடியோ கண்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இரட்டை காற்றுப்பை மாற்றம் ABS அணைத்து வேரியன்ட்டுகளிலும் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஏழு மற்றும் எட்டு இருக்கை கொண்ட வடிவமைப்பில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் மெரூன், பர்பிள், வெள்ளை, சில்வர், கருப்பு மற்றும் ஆக்குவா மரைன் என ஆறு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடல் புத்தம் புதிய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சினில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 121bhp திறனையும் மற்றும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் மூலம் முன்புற வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடல் 17.6kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் டொயோட்டா இன்னோவா, மாருதி சுசூகி எர்டிகா, ஹோண்டா BR-V, ரெனோ லாட்ஜி மற்றும் டாடா ஹெக்சா போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.