புதிய ஃபியூச்சர் S காம்பேக்ட் SUV கான்செப்ட் மாடலின் இரண்டாவது டீசரை வெளியிட்டது மாருதி சுசூகி

மாருதி சுசூகி நிறுவனம் புத்தம் புதிய ஃபியூச்சர் S காம்பேக்ட் SUV கான்செப்ட் மாடலின் முதல் டீசர் படத்தை வெளியிட்டு சில நாட்கள் ஆனா நிலையில் தற்போது இதன் இரண்டாவது  டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் வரும் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலின் டீசர் படத்தை வைத்து பார்க்கும் போது இது ஒரு நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் SUV மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி நிறுவனம் ஒரே ஒரு படத்தை தவிர வேறு எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. பலேனோ, புதிய ஸ்விப்ட், இக்னிஸ் மற்றும் டிசைர் மாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ள ஹார்ட்டெக் எனும் அதே பிளாட்பார்மில் தான் இந்த புதிய மாடலும் தயாரிக்கப்பட உள்ளது.

எஞ்சின் தொடர்பாகவும் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சினிலும் வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா மற்றும் இக்னிஸ் மாடல்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.