அறிமுகப்படுத்தப்பட்டது புத்தம் புதிய ரெனோ அர்கனா கூப் கிராஸ் ஓவர்

ரெனோ நிறுவனம் புத்தம் புதிய அர்கனா கூப் கிராஸ் ஓவர் மாடலை தற்போது ரஸ்யாவில் நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு மாஸ்கோ மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ரெனோ நிறுவனத்தின் BO பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் பெயர் ‘arcum’ எனும் லத்தின் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ரெனோ கேப்டர் மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்படும்.

இந்த மாடல் அணைத்து வித சாலை மற்றும் கால நிலைகளுக்கும் ஏற்றவாறு செயல்திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முதலில் ரஸ்யாவில் வெளியிடப்படும் பிறகு மற்ற நாடுகளில் வெளியிடப்படும். 

இந்த மாடலின் எஞ்சின் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. எனினும் முற்றிலும் புதிய எஞ்சினுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் ஜீப் காம்பஸ் மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.