ரூ.26.28 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட புதிய டொயோடா - ஃபார்சுனர்

டொயோடா நிறுவனம் இறுதியாக தனது மேம்படுத்தப்பட்ட புதிய  ஃபார்சுனர் SUV  மாடலை ரூ.26.28 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. 

வேரியன்ட்  வாரியாக இதன் சென்னை ஷோரூம் விலை விவரம்: 
2.8 லிட்டர்  டீசல்
2WD MT - Rs 27.88 லட்சம்
2WD AT - Rs 29.50 லட்சம்
4WD MT - Rs 30.41 லட்சம்
4WD AT - Rs 31.48 லட்சம் 

2.7 லிட்டர்  பெட்ரோல்
2WD MT - Rs 26.28 லட்சம்
2WD AT - Rs 27.97 லட்சம்

முன்புற கிரில், பின்புற விளக்குகள், பக்கவாட்டு வடிவமைப்பு  என வெளிப்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் பொது LC ப்ராடோ போன்ற தோற்றமளிக்கிறது. பகல் நேரத்தில் ஒளிரும் LED, பின்புற LED  விளக்குகள்  விளக்குகள் மற்றும் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்  என அதிக உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.   உட்புறம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறம் கருப்பு மற்றும் சில்வர் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றுப்பை, தானியங்கி குளிரூட்டி, முகப்பு விளக்குகள், ஆன்டி லாக் ப்ரேக் என அனைத்து உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலில் உள்ள   2.8 லிட்டர்  டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கிறது. 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166 bhp  திறனும் 245Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  2.8 லிட்டர் டீசல் என்ஜின் 177 bhp  திறனும் 420Nm(மேனுவல்) & 450Nm (ஆட்டோமேட்டிக்) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு என்ஜினுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.  ஆனால் 4 வீல் டிரைவ் சிஸ்டம் டீசல் எஞ்சினில் மட்டும் தான் கிடைக்கும் பெட்ரோல் மாடலில் இல்லை. இந்த மாடல் எண்டவர் மற்றும் ட்ரைல்பிளேசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.