ரூ.12.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஆறாம் தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா

இறுதியாக ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய ஆறாம் தலைமுறை எலன்ட்ரா மாடலை ரூ.12.99 லட்சம் டெல்லி ஷோரூம்  ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஆறாம் தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா மாடல் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. LED  விளக்குகள், அலாய் வீல், சன் ரூப், ஆப்பிள் கார் பிலே சிஸ்டம் என சகல வசதிகளும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் இந்தியாவில் 2.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் உடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  152Bhp திறனையும் 196 Nm இழுவைத்திறனையும் வழங்கும்.  அதே போல் இதன் டீசல் என்ஜின்  128Bhp திறனையும் 265 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும்.

இந்த புதிய மாடல் தற்போதைய மாடலை விட அதிக நீளமும் அகலமும் கொண்டது. ஆனால் வீல்பேசில் மாற்றம் இல்லை. புதிய தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா மாடல் 4570 மிமீ நீளமும், 1800 மிமீ அகலமும் மற்றும் 1465 மிமீ உயரமும் கொண்டது. இந்த மாடல் வோல்க்ஸ்வேகன் ஜீட்டா, ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் செவ்ரோலெட் குரூஸ் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்
எலன்ட்ரா 2.0 MPi S - ரூ.12.99 லட்சம்
எலன்ட்ரா 2.0 MPi SX - ரூ.14.79 லட்சம்
எலன்ட்ரா 2.0 MPi SX (AT) - ரூ.15.89 லட்சம்
எலன்ட்ரா 2.0 MPi SX (O) - ரூ.16.59 லட்சம்
எலன்ட்ரா 2.0 MPi SX (O) AT - ரூ.17.99 லட்சம்

டீசல்
எலன்ட்ரா 1.6 CRDi S - ரூ.14.79 லட்சம்
எலன்ட்ரா 1.6 CRDi SX - ரூ.16.39 லட்சம்
எலன்ட்ரா 1.6 CRDi SX (O) - ரூ.17.69 லட்சம்
எலன்ட்ரா 1.6 CRDi SX (O) AT - ரூ.19.19 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.