வெளியிடப்பட்டது திறந்த கூரை கொண்ட ஆஸ்டன் மார்ட்டின் வேண்டேஜ் GT12

Q by  ஆஸ்டன் மார்ட்டின்  திறந்த மேற்க்கூரை கொண்ட வேண்டேஜ் GT12  மாடலை குட்உட்   பெஸ்டிவல் ஆப் ஸ்பீட் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது. Q by  ஆஸ்டன் மார்ட்டின்  என்பது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காரை மாற்றம் செய்து தரும் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் பிரிவு ஆகும். Q by  ஆஸ்டன் மார்ட்டின்  நிறுவனம் இந்த காரை உருவாக்க ஒன்பது மாதங்கள் எடுத்துக் கொண்டது. இந்த மாடல் வேண்டேஜ் GT12  கூப் மாடலிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் வெளிப்புறத்தில் சிறந்த செயல்திறனை வழங்க குறைந்த எடை கொண்ட கார்பன் பைபர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 6.0 லிட்டர் கொண்ட V12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 592 Bhp  திறனை வழங்கும். இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்ட III- பெடல் ஷிப்ட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Q by  ஆஸ்டன் மார்ட்டின்  நிறுவனம் வெறும் ஒன்பது மாதங்களில் இந்த காரை முழுமையாக வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Q by  ஆஸ்டன் மார்ட்டின்  நிறுவனம் இதற்கு முன்பே சில கார்களை வடிவமைத்து கொடுத்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.