இந்தியாவில் வெளியிடப்படுமா செவ்ரொலெட் அட்ரா கான்செப்ட் மாடல்

செவ்ரொலெட் நிறுவனம் அட்ரா கான்செப்ட் மாடலை 2018 ஆம் ஆண்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண் காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முழுவதுமாக இந்தியாவிலெயே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் போது இது வெரும் காட்சிக்கான மாடல் என்று செவ்ரொலெட் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது இந்தியாவில் காம்பேக்ட் SUV மாடல்களின் விற்பனை சிறப்பாக இருப்பதால் இந்த மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காமா  2 பிளாட்பார்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த மாடலுக்காக மிக அதிகமான முதலீட்டை இந்தியவில் செய்ய இருப்பதாகவும் ஆட்டொ மொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடல் வெளியிடப்பட்டால் ஹுண்டாய் க்ரெடா, ரெனால்ட் டஷ்டர், நிசான் டெர்ரானொ மற்றும் மாருதி சுசுகி s க்ராஷ் போன்ற மாடல்கலுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.